Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காரில் தவறவிட்ட நகைகள்…. போலீசாரிடம் ஒப்படைத்த டிரைவர்….குவியும் பாராட்டுக்கள்…!!

கோவை பகுதியைச் சேர்ந்த டிரைவர் தனது காரில் பயணிகளால் தவறவிட்ட 40 பவுன் நகைகளை போலீசாரிடம் ஒப்படைத்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். கோவை மாவட்டம் பகுதியைச் சேர்ந்த பாபி ஒரு டிராவல்ஸ் நடத்தி வந்துள்ளார். விடுமுறை காலங்களில் தனது காரை அவரே ஓட்டிச் சென்று வந்துள்ளார். இந்நிலையில் ஒரு குடும்பம் (ஒரு ஆண், ஒரு மூதாட்டி, பெண், சிறுவன்) கோவை கோர்ட் முன்பு உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என்று காரில் ஏறி உள்ளனர். அவர்களை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திருடிட்டு போய்ட்டாங்க… எல்லா நகையும் போச்சு… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!!

வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரதிலுள்ள சூரப்பள்ளி ஊராட்சிகுட்பட்ட நொரச்சி வளவு பகுதியில் வசிப்பவர்  வர்ணன். மெக்கானிக் வேலை பார்க்கும் இவர் சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டார். மற்றும் இவருடைய மனைவி வீட்டின் கதவை பூட்டி விட்டு, உறவினரின் வீட்டிற்கு சென்று விட்டார். அதன்பின் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த அவர்கள், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சிச்சிக்குள்ளாயினர். இதனையடுத்து வீட்டிற்குள் […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவமனையில் சடலத்திடன் நகை திருடிய ஊழியர்கள்… 2 பேர் கைது…!!!

திருப்பதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களிடமிருந்து நகைகளை திருடிய 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் திருப்பதியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அலிபிரி அருகே இருக்கின்ற சிம்ஸ், ரூயா மற்றும் பத்மாவதி மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை மருத்துவமனை நிர்வாகத்தினர் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்காமல் அரசு விதிமுறையின்படி நல்லடக்கம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 50 சவரன் நகை ரூ.4 லட்சம் கொள்ளை ….!!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 50 சவரன் நகை மற்றும்  4 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள வாலிஸ் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பராஜ் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சென்னையில் இருக்கும் மகனை காண மனைவியுடன் கடந்த சனிக்கிழமை புறப்பட்ட அவர் வீட்டை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை அண்ணன் மகன் ஜோசப் என்பவரிடம் ஒப்படைத்து விட்டு புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நகைக்கடை அதிபரை தாக்கி 8 பவுன் கொள்ளை; சிசிடிவியில் சிக்கிய திருடர்கள்..!!

திருச்சி பாலக்கரை பகுதியில் நகை கடை அதிபரை தாக்கி 8 பவுன் தங்க நகை பறித்துச் சென்று 7 பேர் கொண்ட கொள்ளைக் கும்பலை பாலக்கரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் 50 வயதான ரவிச்சந்திரன். இவர் திருச்சி பாலக்கரை இடத்தில்  நகைக்கடை வைத்துள்ளார். கடந்த 21ஆம் தேதி இரவு நகை செய்யும் ஆசாரி வீட்டில் இருந்து 8 பவுன் நகைகளை பெற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். இருசக்கர வாகனத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலம் விட்டு மாநிலம் சென்று நகைகள் திருட்டு….!!!

புதுச்சேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டை உடைத்து நகை திருட்டில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி வெங்கட்டா நகர் ரோஸ் அபார்ட்மென்ட்டில் குடியிருந்து வருபவர் ரகானா பேகம், இவர் கடந்த மே மாதம் வீட்டை பூட்டிவிட்டு டெல்லிக்கு சென்று இருந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 21ம் தேதி தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை அடையாளம் தெரியாத நபர் எடுத்து சென்றதாக பெரியகடை காவல் […]

Categories

Tech |