பணம், நகையை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காமராஜர் நகர் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன் என்ற மகன் உள்ளார். இவர் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த வருடம் ஜனவரி மாதம் 11-ஆம் தேதி கார்த்திகேயன் தனது வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள கிராமத்திற்கு குடும்பத்தினருடன் சென்று விட்டார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த கார்த்திகேயன் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். […]
