நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களின் இறுதிப்பட்டியல் ஒரு வாரத்தில் வெளியிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி கூறியதாவது, கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் தள்ளுபடி தகுதியானவர்களின் இறுதிப்பட்டியலானது ஒரு வாரத்தில் வெளியிடப்பட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதையடுத்து அந்தந்த கூட்டுறவு சங்கங்களின் தகவல் பலகையில், பயனாளிகள் அறிந்து கொள்ளும் வகையில், அந்த பட்டியலானது ஒட்டப்படும். மேலும் முன்னர் வெளியிட்ட அறிவிப்பின் படி, 2021 ஜனவரி 31ஆம் தேதி வரை உள்ள […]
