தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் காணிக்கையாகச் செலுத்தப்படும் நகைகள் மற்றும் பயன்பாட்டில் இல்லாத நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி அதனை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்ய முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து சென்னையை சேர்ந்த ஏ.வி. கோபாலகிருஷ்ணன் மற்றும் திருவள்ளுவரை சேர்ந்த சரவணன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கோயில்களில் என்னென்ன நகைகள் உள்ளது என்பதை பற்றி முறையான […]
