மூதாட்டியிடம் முதியோர் உதவித்தொகை வாங்கித் தருவதாக கூறி நகையை அபகரித்துச் சென்று இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் அருகே இருக்கும் ரயில்வே பீடரோடு பகுதியை சேர்ந்த பாண்டி என்பவரின் மனைவி ரஞ்சிதம். இவர்களுக்கிடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக சென்ற எட்டு வருடங்களாக பிரிந்து வாழ்கின்ற நிலையில் ரஞ்சிதத்திற்கு கண்ணில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சிந்தாமணியில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சென்ற பொழுது இளைஞர் ஒருவர் அவரிடம் நைசாக பேச்சு கொடுத்த பொழுது […]
