முன்னாள் ராணுவ வீரரின் வீட்டில் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரில் முன்னாள் ராணுவ வீரரான ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொக்கம்பட்டியில் இருக்கும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுமித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகன் கிரண் குமார் சென்னையிலும், மகள் நியூசிலாந்திலும் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் சுமித்ராவை சென்னையில் இருக்கும் மகன் […]
