சென்னை தியாகராய நகர் ராஜாச்சார் தெருவில் வசித்து வருபவர் காயத்ரி (45). இவர் நேற்று முன்தினம் மாலை 6.20 மணி அளவில் தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலை வழியாக நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 2 பேர் காயத்ரி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு தப்ப முயன்றனர். இதனால் காயத்ரி கூச்சலிட்டார். இதையடுத்து பொதுமக்கள் அந்த 2 பேரையும் மடக்கிப் பிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் 2 […]
