அமெரிக்காவின் யார்க் நகரில் ஜனநாயக கட்சி நன்கொடையாளர்கள் மத்தியில் ரஷ்ய ஜனாதிபதி புடினின் அணு ஆயுத அச்சுறுத்தல் பற்றி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உரையாற்றியுள்ளார். அதில் தற்போதைய சூழ்நிலையை ரஷ்ய ஜனாதிபதி புடின் உடனும் உலகம் அணு ஆயுத விளிம்பிலிருந்த காலகட்டதுடனும் அமெரிக்க ஜனாதிபதி ஒப்பிட்டு பேசியுள்ளார். தனது தோல்விக்கு பதில் அளிக்கும் விதமாக அணு ஆயுதங்களை பயன்படுத்துவதாக புடின் வழங்கி வரும் அச்சுறுத்தல் 1962ல் கியூபா ஏவுகணை நெருக்கடியைப் போன்றது என அவர் கூறியுள்ளார். […]
