திருவாரூர்; முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (70). கடந்த 2 மாதங்களுக்கு முன்னர், இவரது மனைவி காலமானார். இவரது துக்க நிகழ்ச்சிக்கு வெளியூர்களில் இருந்து உறவினர்கள் வந்தள்ளனர். அப்போது, கருப்பையா வீட்டிலிருந்து சுமார் 48 பவுன் நகைகள் காணாமல்போனது. பின்னர் இது தொடர்பாக முத்துப்பேட்டை காவல்நிலையத்தில் புகாரளித்திருந்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் உறவினர்களிடம் விசாரணை நடத்தியதில், அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கருப்பையாவின் தம்பி மகளான கெளசல்யா (22), தான் தான் […]
