கொரோனா காலகட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் ஒன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்தது. இந்தநிலையில், புதுவையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து, மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாததால் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. காலை-மாலை பொதுமக்கள் அதிகம் செய்யும் நேரங்களில் குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால், நகரப் பேருந்துகளில் அதிகமான கூட்டம் உள்ளது. அதில் லாஸ்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் பள்ளி […]
