கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரை நகர்ப்புற சேவைகளை மேம்படுத்துவதற்கு ஆசிய வளர்ச்சி வங்கியுடன் ரூபாய்.1,040 கோடி கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டு உள்ளது. தமிழகத்தின் கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரை ஆகிய நகரங்களில் பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் அடிப்படையில் கழிவுநீர் சேகரிப்பு, சுத்திகரிப்பு, கழிவுநீர் அகற்றுதல் மற்றும் குடிநீர் விநியோக முறைகளை உருவாக்குவதற்காக மத்திய அரசும், ஆசிய வளர்ச்சி வங்கியும் ரூபாய்.1,040 கோடி கடன் ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டது. தமிழ்நாடு நகர்ப்புற முதலீட்டு திட்டத்திற்குரிய 3வது தொகுப்பு கடன் ஒப்பந்தத்தில் […]
