நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட சில தினங்களில் இருந்து திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் திமுக நிர்வாகி ஆபே மணி கொடூரமாக கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து சென்னை மடிப்பாக்கத்தில் அதிமுக வட்ட செயலாளர் செல்வம் கொலை செய்யப்பட்டார். மேலும் தேர்தல் தொடர்பாக மாநிலம் முழுவதும் அடிதடி தாக்குதல் என பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த சம்பவங்கள் ஓட்டுப்பதிவு நாளிலும் நீடித்தது. […]
