தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி 138 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பிப்ரவரி 22 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்கள் பதவியேற்றனர். நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கும், மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கும் இன்று (மார்ச்.4) மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. மறைமுக தேர்தலில் […]
