பசுமை பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னாகரம் சாலையில் ஏ.எஸ்.டி.சி காலனி அமைந்துள்ளது. இங்கு கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பசுமை பூங்கா அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக ரூபாய் 75 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவானது சுற்று சுவர் வசதியுடன், நடைபாதை வசதிகள், இருக்கைகள், குழந்தைகள் விளையாடுவதற்கான பொழுதுபோக்கு அம்சங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், செடிகள் போன்றவற்றுடன் அமைக்கப்பட இருக்கிறது. இந்த பணிகளை தொடங்குவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றுள்ளது. […]
