பொதுமக்களின் வீடு வீடாக சென்று வெப்ப நிலை பரிசோதிக்கும் பணியில் 250-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரனோ தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது.இதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இதனையடுத்து இம்மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிக்காமல் இருக்க பெருநகராட்சி பகுதிகளில் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி தலைமையில் சுகாதாரத்துறையினர் பொதுமக்களின் வீடு வீடாக […]
