சேலம் மாநகராட்சியில் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்ப இருக்கும் பொருட்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று தேர்தல் பார்வையாளர் அண்ணாதுரை ஆய்வு மேற்கொண்டார். சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகள் உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இதற்காக மாநகர பகுதியில் 709 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிகளுக்கு தேவையான 84 வகையான பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதாவது கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக 709 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு தேவையான வெப்பமானி, சானிடைசர், முககவசம், கையுறைகள், […]
