திருப்பத்தூரில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்தை த.மு.மு.க. வினர் பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வங்கியில் முன்னாள் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சந்திரசேகர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனால் அவரது சடலத்தை சந்திரசேகர் மகன் மற்றும் மகள் அடக்கம் செய்வதற்காக கேட்டுள்ளனர். இதனையடுத்து மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் […]
