கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்விளை பகுதியில் மிதுன் என்பவர் வசித்து வருகிறார். தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வந்த இவர் கொரோனா காரணமாக ஆன்லைனில் படித்து வந்துள்ளார். கடந்த 7ம் தேதி மிதுன் வெளியே சென்றுவிட்டு வருவதாக கூறி தனது பைக்கில் சென்றுள்ளார். இதையடுத்து மிதுன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பததால் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மிதுன் அறையில் சோதனை மேற்கொண்டனர். […]
