திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் கடந்த 12ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழனிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வர தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் பாதயாத்திரை வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக தோழி எனும் இரு சக்கர வாகன சேவை தொடங்கப்பட்டுள்ளது. 15 இருசக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனத்தை இயக்குவதற்கு 30 பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் […]
