Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பிரதமர் தல தோனி… முதல்வர் தளபதி விஜய்…. மதுரையில் பரபரப்பு போஸ்டர்….!!!!

நடிகர் விஜய், நெல்சன் திலீப் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இந்த நிலையில், பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தளத்தின் அருகே, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி நடிக்கும் விளம்பர படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது. இதனை அறிந்த, தோனி பீஸ்ட் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று நடிகர் விஜயை சந்தித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படப்பிடிப்பின்போது தல, தளபதி சந்திப்பு…. இணையத்தை தெறிக்கவிடும் புகைப்படங்கள்….!!!

தல, தளபதி நேரில் சந்தித்து ஒன்றாக எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனான நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் ஐபிஎல் போட்டி விரைவாக தொடங்கப்பட உள்ள நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் தோனி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சென்னை வந்த தோனி… அமீரகம் பறக்கும் சிஎஸ்கே… ஆவலில் ஐபிஎல் ரசிகர்கள்…!!!

ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி சென்னை வந்துள்ளார். கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டியானது செப்டம்பர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகின்றது. மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மூலம் இந்த தொடர் தொடங்க உள்ளது. ஐபிஎல் போட்டியில் மீதமுள்ள 31 ஆட்டங்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதற்கு ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தோனி ஹேர் ஸ்டைலுக்கு மாறிய விஜய பிரபாகரன்…. வைரலாகும் புகைப்படம்….!!!

தோனி ஹேர் ஸ்டைலுக்கு விஜயபிரபாகரன் மாறியுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் விஜயகாந்த். தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வந்த இவர் தேமுதிக எனும் கட்சியில் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து வருகிறார். இவரைப் போலவே இவரது மகன் விஜய பிரபாகரனும் கட்சிக்காக உழைத்து வருகிறார். அதன்படி தனது கட்சியின் கொள்கைகளை மக்களிடம் வெளிப்படையாக பேசி வருகிறார். அந்த வகையில் இவர் சமீபத்தில் மேடையில் கேப்டன் மாசா கெத்தா என […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனி தான் காரணம்…. பிரபல கிரிக்கெட் வீரர் கொடுத்த ஷாக்…!!!!

இந்திய முன்னாள் கேப்டன் தோனியால் தான் தன்னுடைய வாய்ப்பு பறிபோனது என பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார். தனக்கு ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தவில்லை. மேலும் வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்த வேளையில் தோனியின் வருகை அனைத்தையும் மாற்றி விட்டது. அவர் சிறந்த விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் இரண்டுமாக இருந்தார் என கூறியுள்ளார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: தோனி விலகினால் IPL-ல் இருந்து விலகுவேன்…. பிரபல வீரர் அதிர்ச்சி….!!!!

பிரபல இந்திய வீரர் மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni) பற்றிய ஒரு முக்கியச் செய்தி வெளியாகி உள்ளது. தல தோனி என்னும் எத்தனை வருடங்களுக்கு ஐபிஎல் விளையாடுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி காஷி விஸ்வநாதன் எம்.எஸ்.தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை (MS Dhoni’s cricket career) குறித்து பேசியுள்ளார். தோனி இப்பவும் ழு உடற்தகுதியுடன் இருப்பதால் சென்னை அணிக்காக மேலும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனியின் நம்பரை ‘ரிடையர்’ செய்ய வேண்டும்… சபா கரீம் வேண்டுகோள்….!!

தோனியின் நம்பரை ‘ரிடையர்’ செய்ய வேண்டும் என்று விக்கெட் கீப்பர் சபா கரீம் வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவரை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. இவர் கடந்த சில மாதங்ளுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக தெரிவித்தார். மற்ற போட்டிகள் ஆனால் ஐபிஎல் போன்ற தொடர்களில் தொடர்ந்து விளையாடுவதாக தெரிவித்திருந்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் சரி, ஐபிஎல் போட்டிகளிலும் இவரது ஜெர்சி நம்பர் 7. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிறந்தநாள் அன்று தோனியுடன் மோதல்… பரபரப்பு…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் கிரிக்கெட் உலகின் நாயகனான மகேந்திர சிங் தோனிக்கு இன்று பிறந்தநாள். டோனியின் பிறந்தநாளான இன்று அவரின் புகைப்படங்கள் மற்றும் வாசகங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 2011இல் உலகக் கோப்பையை வென்றது உள்ளிட்ட அவரது சாதனைகள் குறித்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. இப்படியான நிலையில் உலகக்கோப்பையை வென்றதற்கு தோனி காரணம் அல்ல என்று தொடர்ந்து கூறிவரும் காம்பீர் இன்று தோனி பிறந்தநாள் அன்று தனது பேஸ்புக் கவர் […]

Categories
விளையாட்டு

40-வது பிறந்தநாளில் 40 அடியில் கட்அவுட்…. தெறிக்கவிடும் தோனி ரசிகர்கள்….!!!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி பிறந்தநாளை ரசிகர்கள் பலரும் இன்று கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் முக்கிய பிரபலங்கள் அனைவரும் காலை முதலே தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.இந்நிலையில் தோனியின் 40வது பிறந்தநாளை குறிப்பிடும் வகையில் சென்னை அருகே உள்ள சாத்தங்குப்பத்தை சேர்ந்த ரசிகர்கள் 40 அடியில் கட்அவுட் வைத்துள்ளனர். அதில் கேப்டனாக தோனி எந்தெந்த ஆண்டில் எந்த கோப்பைகளை வென்றார் என்பதை குறிப்பிட்டுள்ளனர்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொடுவா மீசையுடன் தோனி…. வைரலாகி வரும் புகைப்படம்….!!!!

சில விளையாட்டு வீரர்களை ரசிகர்கள் பாராட்டுகிறார்கள், சிலர் மீது பாசம் காட்டுகிறார்கள். சிலரையோ தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருதத் தொடங்குகிறார்கள். அப்படி ரசிகர்களின் குடும்பத்தில் ஒருவராகிவிட்டவர்தான் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்.எஸ்.தோனி. தற்போது எம்.எஸ்.தோனி தனது மனைவி சாக்ஷி மற்றும் மகள் ஜீவா ஆகியோருடன் தனக்கு கிடைத்துள்ள நேரத்தை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் செலவழித்து வருகிறார். இமாச்சல பிரதேசத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சிம்லாவுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இந்தியா டீம்ல பெஸ்ட் கேப்டன் யாரு”….? “விராட் கோலியா அல்லது தோனியா”-மைக்கல் வாகன் பதில் …!!!

டி20 போட்டிகளில் விராட் கோலியை விட ,தோனிதான் சிறந்த கேப்டனாக இருந்துள்ளார், என்று இங்கிலாந்தின் முன்னாள் கேப்டனான மைக்கல் வாகன்  கூறியுள்ளார். கடந்த 2007 ம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக தோனி தலைமை ஏற்று, சிறப்பாக வழி நடத்தியிருந்தார். இவருக்குப் பின் , இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி  சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இதில் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடுகிறது . இந்நிலையில் இந்திய அணியில் […]

Categories
Uncategorized கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் 14 வது சீசன்…. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி…. தோனியின் பெற்றோர்களுக்கு கொரோனா உறுதி…

கிரிக்கெட் வீரரான தோனியின் பெற்றோர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால்  மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது ஐபிஎல் 14 வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி பங்கேற்றுள்ளார். தற்போது இவர் மும்பையில் வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு எதிராக நடக்க இருக்கும் போட்டியில் கலந்து கொள்வதற்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். மேலும் கடந்த ஆண்டு ஐபிஎல் 13 வது சீசனில் விளையாடிய பிறகு தோனி எந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

என்னை யாரும் அப்படி சொல்லிட கூடாது…! கெத்தாக பேசி அதகளம் செய்த ”தல தோனி” ….!!

தனக்கு விளையாட பிட்னஸ் இல்லை என ஒருவரும் சொல்லிவிடக்கூடாது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கூறியுள்ளார். கடந்த சீசனை காட்டிலும் தோனி உடல் ரீதியாக மிகவும் உற்சாகமாக களத்தில் செயல்பட்டு வருகிறார். இதனிடையே ராஜஸ்தான் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியின் போது ரன் அவுட்டில் இருந்து தப்பிக்க தோனி டைவ் அடித்து கிரீஸை எட்டினார். இது தொடர்பான போட்டோ வைரல் ஆகிய நிலையில் அதை பகிர்ந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றன. 2019ஆம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிக்குவாரா ”தல” திக்திக் காட்டிய ”ரூல்ஸ்”… கெத்து காட்டி தப்பிய தோனி….!!

மீண்டும் பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி ஐபிஎல் தொடரில் அடுத்த சில போட்டிகளில் விளையாட முடியாத சூழல் ஏற்படலாம் என இருந்ததை தோனி தகர்த்துள்ளார். கடந்த பத்தாம் நாள் நடைபெற்ற டெல்லி கேப்பிட்டல் அணிக்கு எதிரான ஐபிஎல் டி- ட்வென்டி தொடரில் நிர்ணயிக்கப்பட்ட கால கெடுவுக்குள் பந்து வீசாமல் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனிக்கு பன்னிரண்டு லட்சம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எந்த ரகசியமும் இல்லை…. எனக்கு ரொம்ப வயசாகிட்டு…! மனம் திறந்து பேசிய தோனி …!!

இது ஒரு நீண்ட பயணம் என்றும்,  வயது ஆகி விட்டதாகவும் உணர்வதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கூறியுள்ளார். சென்னை அணிக்காக-200 ஆட்டங்களில் விளையாடியது குறித்து தோனி மனம் திறந்து பேசினார். இந்த மைல்கல் குறித்து எப்படி உணர்கிறீர்கள் ?  என்று 39 வயதான தோனியிடம் கேட்டபோது,  மிகவும் வயதாகி விட்டதாக உணர்கிறேன் என்று நகைச்சுவையாக பதிலளித்தார். இது ஒரு மிக நீண்ட பயணம் என்றும், கடந்த 2008ஆம் ஆண்டு இந்த பயணம் தொடங்கியதாகவும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எனக்கு வயதானதை உணருகிறேன்… வர்ணனையாளரின் கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்த தோனி..!!

பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று வெற்றி பெற்றதை அடுத்து வர்ணனையாளர் கேள்விக்கு எம்எஸ் தோனி நகைச்சுவையாக பதிலளித்தார். நேற்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை அணி மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தியது. . டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 106 ரன்கள் மட்டுமே அடித்தனர். பின்னர் 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 15.4 ஓவரில் 4 விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 போட்டிகளில் தோனியை முந்தி…. அஸ்கார் ஆப்கான் முதலிடம்…!!

சர்வதேச இருபது ஓவர் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு வரும் தோனியை முந்திச் சென்ற அஸ்கார் ஆப்கான் முதலிடம் பெற்றுள்ளனர். புது டெல்லியில் கேப்டன் டோனி சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்து கிரிக்கெட் வீரர்களின் வரிசையில் இந்திய முன்னாள் கேப்டன் ஆக முதலிடத்தில் இருந்து வந்துள்ளார். இவர், சர்வதேச இருபது ஓவர் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 41 ரன்கள் வெற்றி பெற்றுள்ளார். ஜிம்பாப்வேக்கு எதிராக நடந்து வரும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற தல தோனி”… வைரலாகும் வசனங்கள்…!!

சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் நீக்கப்பட்ட காட்சியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்து விஜய் பேசிய வசனங்கள் தற்போது ரசிகர்கள் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகனன், சாந்தனு போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சுமார் 10 மாதங்கள் காத்திருப்புக்கு பிறகு கடந்த மாதம் 13 ஆம் தேதி பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியானது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரூ.152 கோடி… ஐபிஎல் மூலம் அதிக பணம் சம்பாதித்து முதலிடம்..மாஸ் காட்டும் “தல” தோனி…!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மூலமாக 150 கோடிக்கு அதிகமாக சம்பாதித்த முதல் வீரராக எம்எஸ் தோனி திகழ்கிறார். கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலம் முதல் முதலில் நடந்தபோது தோனி மிகப்பெரிய வீரராக இருந்தார். அப்போது அவரை சிஎஸ்கே ரூ.6 கோடிக்கு ஏலம் எடுத்தது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அதே தொகையை தோனி சம்பாதித்தார். 2016ஆம் ஆண்டு பிசிசிஐ முதல் தர வீர தக்கவைப்பு தொகை ரூ.8 கோடியாக அதிகரித்தது. அதனால் தோனி 2011 முதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தல தோனிக்கு விருது…! ”ஓய்வு பெற்றாலும் கெத்து”… ஐசிசி கொடுத்த அங்கீகாரம்…!

இந்திய கிரிக்‍கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு ஸ்பிரிட் ஆஃப் கிரிக்‍கெட் விருது வழங்கி ஐ.சி.சி. கவுரவித்துள்ளது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி சிறந்த வீராக தேர்வு செய்யப்பட்டு, சர் கார்பீல்டு சோபர்ஸ் விருது அறிவிக்‍கப்பட்டுள்ளது. கிரிக்‍கெட்டில் கடந்த 10 ஆண்டுகளில் சிறந்து விளங்கிய வீரர்களை கவுரவிக்‍கும் வகையில் ஐ.சி.சி. விருது வழங்கி வருகிறது. அந்த வகையில், தோனிக்‍கு ஸ்பிரிட் ஆஃப் கிரிக்‍கெட் விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு இங்கிலாந்தின் நாட்டிங்ஹாமில் நடைபெற்ற அந்நாட்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனி வேண்டாம்….15 கோடி சென்னை அணி நஷ்டப்படும்…. முன்னாள் இந்திய வீரரின் கருத்து…!!!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை அணியில் தோனி விளையாடினால் 15 கோடி இழப்பு ஏற்படும் என கிரிக்கெட் விமர்சகர் தெரிவித்துள்ளார் அடுத்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் மார்ச் முதல் மே மாதத்திற்குள் நடத்தப்படும் என  பிசிசிஐ தலைவரான கங்குலி உறுதி செய்துள்ளார். இந்நிலையில் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எதிர்காலத்தில் விளையாடாமல் அவரை கழட்டி விட வேண்டும் என கிரிக்கெட் விமர்சகரும் இந்திய அணியின் முன்னாள் வீரருமான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இப்படி ஒரு ரசிகரா….? “Home of Dhoni Fan” இணையத்தை கலக்கும் வீடு…. நன்றி தெரிவித்த தோனி…!!

கருணையுள்ளம் கொண்ட காவல் ஆய்வாளரை இடமாற்றம் செய்யக்கூடாது என்று பொதுமக்கள் போஸ்டர் ஒட்டி வேண்டுகோள் வைத்துள்ளனர் மதுரை திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிபவர் மதனகலா. இவர் கொரோனா தொற்று பரவிய காலத்தில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு உணவின்றி தவித்த குரங்குகளுக்கு தனது சொந்த செலவில் உணவு வழங்கினார். இந்நிலையில் தேனி மாவட்டத்திலிருக்கும் போடிக்கு ஆய்வாளரை இடமாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் பொதுமக்கள் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் பொறுப்பேற்ற மதனகலா சட்ட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடுத்த ஆண்டு CSK கேப்டன் யார் ? – வெளியான முக்கிய அறிவிப்பு ….!

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உலக அளவில் பிரபலமானது. 8 அணிகள் விளையாடி வரும் நிலையில் இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் என்றாலே தவிர்க்க முடியாத ஒரு அணியாக விளங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தலைமையில் பல்வேறு சாதனைகளை தனதாக்கியுள்ளது. ஆனால் தற்போதைய ஐபிஎல் சீசன் சென்னை அணிக்கு எதிர்பார்த்த மாதிரி அமையவில்லை. தொடர் தோல்விகளை சந்தித்து, மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சென்னைக்கு பிளே ஆஃப் வாய்ப்பு…. தல தோனி சொன்ன அந்த வார்த்தை …. கொண்டாடும் ரசிகர்கள் …!!

ஐ.பி.எல் 2020 தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தற்போதும் முன்னேற வாய்ப்புள்ளது என்று மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். ஐ.பி.எல் 2020 தொடரின் 44-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. துபாயில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். டாஸூக்கு பின் சி.எஸ்.கே கேப்டன் மகேந்திர சிங் தோனியிடம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் நம்பிக்கை உங்களிடம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

100 காரணம் சொல்லலாம்…. நாங்க நினைச்ச மாறி இல்ல…. புலம்பி தள்ளும் தோனி …!!

எங்களுக்கு இந்த முறை அதிஷ்டம் வரவில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எளிதாக வெற்றி கண்டது. 10 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றும், சென்னை சூப்பர் கிங்ஸ் படுதோல்வியடைந்து பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்தது. சென்னை அணியின் தோல்வி ரசிகர்களை நிலைகுலைய வைத்துள்ளது. இறுதிவரை பிளே ஆப் சுற்றுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சுழட்டி அடித்த மும்பை… வெளியேறிய CSK…. துவண்டு போன தோனி… பரபரப்பு பேட்டி …!!

மும்பை அணியுடனான தோல்வியில் நாங்கள் துவண்டு போயுள்ளதாக சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார் ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது. சென்னை அணி சீட்டுக் கட்டுகளை போல விக்கெட்டை பறிகொடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி அசத்தல் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணியின் பிளே ஆப் கனவு தகர்ந்தது. இதுவரை நடந்த அனைத்தை ஐபிஎல் தொடர்களிலும் வென்று பிளே ஆப்  சென்ற சென்னை அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“CSK தோல்வி” தோனி மகள் என்ன செய்வார்…? 5 வயது சிறுமி பற்றி கமெண்ட்… கொந்தளித்த இணையவாசிகள்…!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்றதால் தோனியின் மகளை ஆபாசமாக பேசி கமெண்ட் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்த முறை ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவி வருகின்றது. இதனால் ரசிகர்கள் பலரும் வேதனையிலும் கோபத்திலும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசியாக புதன்கிழமை அன்று விளையாடிய போது 10 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதனால் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் கோபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இன்றைய விளையாட்டு…. சாதனை படைக்க போகிறார் தோனி….!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி இன்று நடக்க இருக்கும் ஹைதராபாத்துக்கு அணிக்கு எதிரான போட்டியில் சாதனை படைக்க இருக்கிறார். இதுவரை ஐபிஎல் போட்டிகளில் கேப்டன் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா சூப்பர்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக 193 போட்டிகளில் விளையாடி உள்ளனர். இன்று இரவு நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டியில் தோனி  194 ஆவது முறையாக விளையாட இருப்பதால் சுரேஷ் ரெய்னாவின் சாதனையை அவர் முறியடிக்க போகிறார். தற்போது தனது சொந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேப்டனாக வாங்க முயன்ற சிஎஸ்கே… நோ சொன்ன அதிரடி வீரர்… களமிறங்கிய தல தோனி… பத்ரிநாத் பேட்டி..!!

சென்னை அணிக்கு முதலில் தோனி கேப்டனாக தேர்வு செய்யப்படவில்லை என்று கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்..   இந்தியாவில் 2008 ஆம் ஆண்டு முதல் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், ஆரம்பம் முதல் தற்போது வரை அணிக்கு வெற்றிகரமாக இருந்து வருபவர் தல என்று அழைக்கப்படும் கேப்டன் தோனி.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி தலைமையில் இதுவரை 3 முறை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது.. அதுமட்டுமில்லை பங்கு பெற்ற அனைத்து தொடர்களிலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நாங்க வயசானவுங்க தான்…. ஆனால், எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்…..!!

19ஆம் தேதி தொடங்க இருக்கும் ஐ.பி.எல் போட்டி தொடருக்கான பயிற்சியில் வீரர்கள் தொடர்ந்து இருந்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடர் வருகின்ற 19 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த போட்டிகள் நடைபெற இருப்பதால் சமூக வலைதளங்களில் ஐபிஎல் குறித்த சுவாரசியங்கள் வைரலாகி வருகின்றன. அவ்வப்போது ஐபிஎல் அணி நிர்வாகத்தினர் […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

ரெய்னாவுடன் சண்டைப்போட்ட தோனி – வெளியாகிய பரபரப்பு தகவல் …!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி மற்றும் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா சண்டையிட்டுக் கொண்டதாக பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்து பரவிவரும் கொரோனாவால் நடப்பு ஆண்டுக்கான  ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கிறது. இதற்காக ஐபிஎல் அணி வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளனர். சென்னை அணியும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் இந்தியா திரும்பியுள்ளார். சொந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரெய்னா IPL விட்டு விலக இது தான் காரணமா…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!

தோனியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தான் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் அணியில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நேரடியாக சென்று விட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் ஒரு வாரம் சென்னையில் தங்கியிருந்து பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. பயிற்சி முடிந்த பிறகு கடந்த 21ஆம் தேதி துபாய்க்கு சென்றது. அங்கு ஒரு வாரம் தனிமைப் படுத்தப்பட்டது அதன் பிறகு 22ஆம் தேதிகொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

யார் நீங்கள்…? தோனியை தூங்கவிடாத கேள்வி… நினைவுகளை பகிர்ந்த சோமி கோலி…!!

  பி.ஏ.எஸ் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் சோமி கோலியின் மனைவி தோனியை பார்த்து யார் இவர் என்று கேட்ட சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார்.   இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனிக்கு கிரிக்கெட் உபகரணங்களை வழங்கிய சோமி கோலி என்பவர் தோனியை குறித்த ஒரு சில சுவாரஸ்ய நிகழ்வுகளைப் பகிர்ந்துள்ளார். தோனி 2004ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானார். அதற்குமுன் ஆறு வருடங்கள் இளம் வீரராகவும், நடுத்தர குடும்பத்தினரின் மகனாகவும் இருந்தார். கிரிக்கெட் உபகரணங்கள் வழங்க பீ.ஏ.எஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அவருக்கு எந்த நெருக்கடியும் இல்ல” பவுலர்கள் ஜாக்கிரதை…. எச்சரித்த இர்பான் பதான்….!!

ஐபிஎல் போட்டியில் தோனிக்கு எதிராக பந்து வீசுபவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என இர்பான் பதான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை கேப்டனாக திகழ்ந்த எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி ஓய்வு பெற்றுள்ளார். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டும் விளையாட உள்ளார். சர்வதேச போட்டியில் மீண்டும் விளையாட முடியுமா? என்ற நெருக்கடி அவருக்கு தற்போது விலகியுள்ளது. எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டுமே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“டி20 உலகக் கோப்பையில் தோனி” பிரதமர் மோடி கோரிக்கை வைக்கணும்…. கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்…!!

பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் பிரதமர் மோடி டி20 உலக கோப்பையில் விளையாடுமாறு தோனிக்கு கோரிக்கை வைக்கலாம் என்று கூறியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி ஆகஸ்ட் 15ஆம் தேதி ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். தோனியின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. T-20 உலக கோப்பை ஆண்டுக்கு  ஒத்திவைக்கப்பட்டதால் தோனி தனது ஓய்வு முடிவை விரைவாக அறிவித்ததாக கூறப்படுகிறது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனி ஓய்வு” எங்க போட்டி நடந்தாலும் போக மாட்டேன்…. பாகிஸ்தான் ரசிகர் தீர்மானம்…!!

உலகில் எங்கு இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடந்தாலும் அதை நான் பார்க்க மாட்டேன் என தோனியின் தீவிர ரசிகர் சிகாகோ சாச்சா கூறியுள்ளார். ஆகஸ்ட் 15 ம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பல தரப்பினரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். தோனியின் தீவிர ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆதரவாளரான சிகாகோ சாச்சா என்றழைக்கப்படும் முகமது பஷீர் தோனியின் […]

Categories
கிரிக்கெட் பேட்டி விளையாட்டு

தோனியின் அடுத்த ஆசை….. இனி இதைத்தான் செய்யப்போகிறார்….. நண்பர் கூறிய தகவல்….!!

தோனி தனது ஓய்வுக்கு பின் இயற்கை முறையில் உரம் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்த போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக இருந்து, பல சாதனைகளை செய்த தோனி கடந்த சனிக்கிழமை இன்ஸ்டாகிராமில் தனது ஓய்வை அறிவித்தார். பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து விளையாடுவார் என கூறப்படுகிறது. பொதுவாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் வீரர்கள் வர்ணனையாளர்களாகவோ அல்லது பயிற்சியாளராகவோ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தோனியாக மாறிய சிவகார்த்திகேயன்…. ஒப்பீடு செய்த பிரபல இயக்குனர் …!!

இயக்குனர் சீனு ராமசாமி நடிகர் சிவகார்த்திகேயனும் தோனியும் ஒரே மாதிரிதான் என்று சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறும் அறிவிப்பினை இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் , முன்னாள் கேப்டனுமான மகேந்திரசிங் தோனி நேற்று வெளியிட்டார். திரை பிரபலங்கள் பலரும் தோனிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் சிவகார்த்திகேயன், ” எங்களை அதிகமாக உற்சாகப்படுத்தியதற்கும், மகிழ்வித்தற்கும் உங்களுக்கு மிகப்பெரிய நன்றி தோனி.   நீங்கள் எப்பொழுதும் ஒரு அற்புதமான […]

Categories
இந்திய சினிமா கிரிக்கெட் விளையாட்டு

லெஜெண்டுகளுக்கு ஓய்வு கிடையாது- தோனி பற்றி திரைபிரபலங்களின் உருக்கம்…!

மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினால் திரைபிரபலங்கள் பலரும் உருக்கமான பதிவினை வெளியிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பை நேற்று வெளியிட்டார். டோனியின் இந்த திடீர் அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஓய்வுபெற்ற தோனிக்கு திரை பிரபலங்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவர்கள் கருத்தின் தொகுப்பு. மகேஷ் பாபு: 2011ஆம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தன்மீது அன்பு காட்டிய ரசிகர்களுக்கு நன்றி – தோனி…!!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஆய்வை  அறிவித்து சில நிமிடங்களில், சுரேஷ் ரெய்னாவும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளுக்கான பயிற்சி மேற்கொள்வதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னை வந்தடைந்தது. இதற்காக மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா, ப்யூஸ் சவாலா, கெதர் ஜாதவ் உள்ளிட்டோர் சென்னை வந்துள்ளனர். நேற்று முதல் நாள் பயிற்சி மேற்கொண்ட  நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடுத்தடுத்து ஓய்வு அறிவிப்பு – துவண்டு போன ஹிட் மேன் …!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தோனியின் இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. தோனி ஓய்வை அறிவித்த சிறிது நேரம் கழித்து சின்ன தல என்று வர்ணிக்கப்படும் சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருவரும் அடுத்தடுத்து ஓய்வை அறிவித்தது இந்திய ரசிகர்களை நிலைகுலைய வைத்துள்ளது. சுரேஷ் ரெய்னாவின் ஓய்வு குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனி கண்ணீர்… மனைவி சாக்‌ஷி உருக்கம்…. வைரலாகும் பதிவு …!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் தங்களது சோகத்தை டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர். தோனியை இனி இந்திய அணிக்காக பார்க்க முடியாது, ஆனால் சென்னை அணிக்காக பார்க்க முடியும் என்ற கருத்துக்களையும் நினைவுகூர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் தோனி ஓய்வு அறிவித்து குறித்து அவரது மனைவி  சாக்‌ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் விளையாட்டு

தோனியின் புகழ் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை- முதல்வர் எடப்பாடி ட்விட்

தோனியின் புகழ் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்ப்பதாகும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட் செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார். இவரின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒட்டுமொத்த ரசிகர்களும் ஹாஷ்டாக் மூலம் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தோனியின் ஓய்வுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கருத்து வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி […]

Categories
தேசிய செய்திகள்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் தோனி …!!

சர்வேதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி அறிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளுக்காக பயிற்சி மேற்கொள்வதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று சென்னை வந்தது. இதற்காக மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா, பியூஸ் சாவ்லா,கேதர் ஜாதவ் உள்ளிட்டோர் நேற்று சென்னை வந்தனர். இன்று முதல் நாள் பயிற்சி மேற்கொண்ட நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு….!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கு பிறகு மகேந்திர சிங் தோனி எந்தவிதமான கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை. இதையடுத்து அவரின் ஓய்வு குறித்த பல வதந்திகள் வந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் மட்டும் கவனம் செலுத்தி பயிற்சி மேற்கொண்டு வந்தார். கொரோனா வேகமாக பரவி வந்ததால் ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இவர் ஆட்டத்தை பார்க்க டிக்கெட் கட்டணம் டபுளாக இருந்தாலும் வருவேன்” ஆர்வத்தில் ஆகாஷ் சோப்ரா…!

ஆகாஷ் சோப்ரா டோனியின் ஆட்டத்தை காண டிக்கெட் கட்டணம் இரு மடங்காக இருந்தாலும் வருவேன் என ஆர்வத்துடன் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி இந்த ஐபிஎல் மட்டுமல்லாமல் 2021, 2022 ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடுவார் என சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசிவிஸ்வநாதன் தெரிவித்ததற்கு ஆகாஷ் சோப்ரா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா கூறுகையில் ” அதிகநாட்கள் தோனி விளையாடுவது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். சமீப […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்… விளையாடி அசத்தும் சிறுமி…!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி அடிக்கும் ஹெலிகாப்டர் ஷாட்டை அடித்து சிறுமி ஒருவர் அசத்தி வருகிறார். சிறுமி ஒருவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அடிக்கும் ஹெலிகாப்டர் சாட்டை விளையாடி அசத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாரி ஷர்மா என்கிற சிறுமி குறித்த வீடியோவை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஆகாஷ் சோப்ரா ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் ” நம் பரி ஷர்மா. திறமைவாய்ந்த சிறுமி அல்லவா அவர் ?” […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BigBreaking: ஓய்வை அறிவித்தார் தோனி…. ரசிகர்கள் அதிர்ச்சி ….!!

கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய ஜாம்பவானாக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனி. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து 3 தர சர்வதேச போட்டிகளிலும் கோப்பையை வென்று அசத்தியவர். இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களின் நம்பிக்கை நாயகனாக…  தல என்று செல்லமாக அழைக்கப்பட்டவர். மகேந்திர சிங் தோனி கடந்த உலகக் கோப்பைக்கு பின்பு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார்.இதனால் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்று செய்திகள் வெளியாகின. இதுகுறித்த வதந்திகளும் அவ்வப்போது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இவர் ஒரு எவர்கிரீன் கிரிக்கெட் வீரர்” பிரபல இந்திய வீரரை புகழ்ந்த வாட்சன்…!

ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் வாட்சன் இவர் ஒரு எவர்கிரீன் கிரிக்கெட் வீரர் என தோனியை புகழ்ந்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் துவங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை உளமாற பாராட்டியுள்ளார் சென்னை வீரரான ஷேன் வாட்சன். “கிரிக்கெட் போட்டிகளில் தோனி ஒரு எவர்கிரீன் கிரிக்கெட் வீரர். அடுத்து வரும் நாட்களில் அவர் கிரிக்கெட் விளையாட விரும்புகிறார். அவர் மேற்கொள்ளும் கடுமையான பயிற்சியை காணும் பொழுது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனி குறித்து கவலையில்லை…. 2022 வரை அவர் விளையாடுவார்…? – சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி

தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தோனி 2022 ஆம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவார் என தெரிவித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கிய நாள் முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி திகழ்கிறார். எல்லா சீசனிலும் அணியை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச்சென்று பெருமை சேர்த்துள்ளார். அடுத்த மாதம் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவிருக்கும் பதிமூன்றாவது ஐபிஎல் போட்டிக்கு தோனி […]

Categories

Tech |