அடக்கம் செய்யப்பட்ட சடலம் தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கிராத்தூர் பகுதியில் ஜெஸ்டல் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி ஜெஸ்டலுக்கு விபத்து நடந்துள்ளது. இதனால் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 16-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி ஜெஸ்டல் உயிரிழந்தார். இந்நிலையில் ஜெஸ்டலின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவருடைய தாய், தந்தையரை அடக்கம் செய்யப்பட்டிருந்த கல்லறைக்கு அருகில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. […]
