கிணற்றில் எதிர்பாராதவிதமாக தோட்டா வெடித்து தொழிலாளர்கள் பலத்த காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நாவல்பாக்கம் கிராமத்தில் நாராயணன் அய்யர் என்பவர் வசித்து வருகிறார். இவரது நிலத்தில் துணையாங்குப்பம் கிராமத்தில் வசிக்கும் சேகர் என்பவர் 3 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் நாராயணன் அய்யர் நிலத்திலுள்ள கிணற்றை ஆழப்படுத்துவதற்காக சேகர் பணிகளை செய்து வந்துள்ளார். இதற்காக அதே பகுதியில் வசிக்கும் குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டா வெடி வைக்கும் வண்டியை வரவழைத்து பணிகளை […]
