Categories
தேசிய செய்திகள்

“எங்கள் ஊழியர்கள் தகுதியின் அடிப்படையில் பணியமர்த்தப்படுகின்றனர்”…. பிரபல ஷாப்பிங் மால் விளக்கம்….!!!!!!!!

பிரபல ஷாப்பிங் வளாகமான   லூலு மால் ஜூலை 10ஆம் தேதி அன்று லக்னோவில் திறக்கப்பட்டுள்ளது. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் திறந்து வைத்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கோடீஸ்வரர் யூசுப் அலி தலைமையிலான அபுதாபியை தளமாக கொண்ட லுலு குழுமத்திற்கு இந்த மால் சொந்தமானதாகும். இந்த நிலையில் லக்னோவில் சமீபத்தில் திறக்கப்பட்ட  லுலு மாலில் ஒரு குழுவினர் திடீரெனப் புகுந்து தொழுகை நடத்துவதை காட்டும் வீடியோ வெளியாகி உள்ளது. இதனை அடுத்து முஸ்லிம் சார்புடைய நிறுவனமாக பாகுபாடு […]

Categories
உலக செய்திகள்

மசூதியில் ஏற்பட்ட திடீர் மோதல்…. 160 பேர் காயம்…!!!!!!

இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதியில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகைக்காக காலை ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கூடியிருந்தனர். அப்போது திடீரென இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர்கள் மசூதியில் நுழைந்ததன் காரணமாக திடீரென அங்கு மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலுக்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. மேலும் மோதல் தொடர்பாக பரவி வரும் வீடியோவில் பாலஸ்தீனியர்கள், வீரர்கள்  மீது கற்களை வீசுவது பதிவாகி இருக்கிறது. மேலும் வீரர்களும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தனர். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ரமலான் நோன்பு தொடங்கியது… பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை..!!

பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்களுக்கு ரமலான் சிறப்பு தொழுகை நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம், முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருப்பது வழக்கம். மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய திருக்குரான் அருளப்பட்டது இந்த ரமலான் மாதத்தில் தான். ஹஜ்ஜை தவிர இறைநம்பிக்கை, நோன்பு, தொழுகை, கட்டாயக்கொடை ஆகிய நான்கு கடமைகளும் ஒன்று சேர இந்த ரமலான் மாதத்தில் தான் நிறைவேற்றப்படுகிறது. இந்நிலையில் ரமலான் மாத பிறை நேற்று மாலை பல்வேறு இடங்களில் காணப்பட்டதை தொடர்ந்து இன்று முதல் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளியில் தொழுகை…. மீண்டும் வெடிக்கும் ஹிஜாப் விவகாரம்…. பரபரப்பு சம்பவம்…!!!

பள்ளி ஒன்றில் முஸ்லிம் மாணவிகள் தொழுகையில் ஈடுபட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம்  தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள அங்காதர்கா என்ற பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு அனைத்து மதத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். சமீபத்தில் நடந்த ஹிஜாப் பிரச்சனை தொடர்பாக போராட்டம் நடந்தது. அதைப்போல் இந்த பள்ளியில் உள்ள முஸ்லிம் மாணவிகள் வகுப்பறை வராண்டாவில் அமர்ந்து தொழுகையில் ஈடுபட்டனர். இந்த வீடியோ இணையத்தில் முகநூல் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

தொழுகை நடக்கும் நேரங்களில் கடைகளை திறக்க அனுமதி…. அதிரடி அறிவிப்பு….!!!!

சவுதி அரேபியாவில் தொழுகை நடக்கும் நேரங்களில் கடைகளை அடைத்துவிடுவது பாரம்பரிய பழக்கமாக உள்ளது. இறை வழிபாட்டுக்காக முழு கவனத்துடன் நேரம் ஒதுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மரபு கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் உலகம் முழுவதும் பரவி உள்ள கொரோனா தொற்று இத்தகைய பழக்க வழக்கங்களை அதிரடியாக மாற்றி வருகிறது. சவுதி அரேபியாவில் தொழுகை நடக்கும் நேரங்களில் கடைகள் அடைக்கப்படுவதால் பொதுமக்கள் பொருட்கள் வாங்குததற்காக சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தொழுகை நேரத்தில் ஏராளமானோர் கடைகள் முன்பு நீண்ட வரிசையில் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் தொழுகை நடத்த முயன்றவர்களை தடுத்த போலீசார் மீது தாக்குதல்: 40 பேர் மீது வழக்குப்பதிவு!

கர்நாடகாவில் மங்களூரு மற்றும் ஹூப்ளியில் கூட்டம் கூடி தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து போலீசாருக்கும் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் 4 போலீசார் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதையடுத்து 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், மக்கள் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த அனுமதி இல்லை […]

Categories

Tech |