ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து சுய தொழில் தொடங்குபவர்களுக்கு கடனுதவி வழங்க தகுதியுள்ள நபர்களை தேர்தெடுக்கும் நேர்காணல் நடைபெற்றுள்ளது. கொரோனா தொற்றினால் பலரும் வாழ்வாதாரம் இழந்து மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அதிலும் இளைஞர்கள் வேலையின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வேலைவாய்ப்பு இல்லாத ஆதி திராவிட இளைஞர்கள் சுயதொழில் தொடங்க வாய்ப்பு அளிக்கும் வகையிலும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் மாவட்ட தாட்கோ அலுவலகத்தின் சார்பில் அரசின் மானியத்துடன் தொழில் முனைவோர் திட்டம், வேலைவாய்ப்பு திட்டம் ஆகியவை […]
