கூலித்தொழிலாளியை வழிமறித்து தாக்கிய 4 வாலிபர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள கருந்தேவம்பாளையம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் இருசக்கர வாகனத்தில் கொன்னபாளையம் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது கந்தம்பாளையத்தை சேர்ந்த பூவரசன், சுகுமார்,சந்தோஷ், கோகுலகிருஷ்ணன் ஆகிய 4 கல்லூரி மாணவர்கள் சங்கரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சங்கரை தகாத வார்த்தைகளால் திட்டி அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனைதொடர்ந்து அப்பகுதி வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த சங்கரை மீட்டு […]
