தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அமுதுண்ணாக்குடி பகுதியில் நாகராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு முருகம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ஆனால் நாகராஜன் முருகம்மாள் மீது சந்தேகமடைந்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். தற்போது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாகராஜன் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். […]
