காவல் நிலையம் முன்பு தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியில் நாராயண பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகநாதன் என்ற மகன் உள்ளார். இவர் நூற்பாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய தங்கை அடையகருங்குளம் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இதற்கு அவருடைய உறவினரான தி.மு.க.வைச் சேர்ந்த வக்கீல் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து லோகநாதனின் தங்கையை மிரட்டியுள்ளார். இந்நிலையில் லோகநாதன் தன்னுடைய மனைவி […]
