மது அருந்துவதை பெற்றோர் கண்டித்ததால் தொழிலாளி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளமங்கலம் கிராமத்தில் பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக பிரபு வேலைக்கு செல்லாமல் வீட்டில் மது அருந்தி வந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த பிரபு ஏரிக்கரைக்கு சென்று மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து […]
