குட்டையில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மகாராஜபுரத்தில் வீரமணி(40) என்பவர் வசித்து வந்துள்ளார்.இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வீரமணியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுவன் குன்னவயல் பகுதியில் இருக்கும் கல்குவாரி குளத்தில் சைக்கிளை கழுவுவதற்காக கொண்டு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக சைக்கிள் கல்குவாரி குட்டையில் மூழ்கியது. இதுகுறித்து சிறுவன் வீரமணியிடம் தெரிவித்துள்ளார். இதனால் மறுநாள் காலை சைக்கிளை மீட்டுத் தருவதாக வீரமணி தெரிவித்துள்ளார். அதன்படி சிறுவனும், வீரமணியும் […]
