மதுபோதையில் தகராறு செய்த தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி சிவாஜி நகரில் கட்டிட தொழிலாளியான பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி இவரது மனைவி பிரிந்து விட்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை மட்டும் உள்ளது. இந்த குழந்தை பாலமுருகனின் சித்தி வீட்டில் வளர்ந்து வருகிறது. மேலும் பாலமுருகன் அடிக்கடி மது அருந்தி விட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் பாலமுருகனிடம் கோவில்பட்டி வள்ளுவர் நகரில் வசிக்கும் […]
