கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கவரத்திரை பகுதியில் கூலி வேலை பார்க்கும் கோபி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கோபி கடந்த 15 வருடங்களாக வீட்டுக்கு செல்லாமல் கூலி வேலை பார்த்து சாப்பிட்டு வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் சோமண்டார்குடியில் இருக்கும் தடிக்கார சாமி கோயில் அருகே இருக்கும் மரத்தில் கோபி தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். […]
