ராமநாதபுரம் மாவட்டத்தில் உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பகுதியில் உள்ள ஆர்.காவனூரில் கதிரேசன்(67) என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கதிரேசன் உடல் நிலை பாதிப்படைந்த நிலையில் வெகு நாட்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினம் வாழ்க்கை விரக்தியடைந்த கதிரேசன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனைப்பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதுள்ளனர். […]
