தொழிலாளி வீட்டில் இருந்த 16½ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள சுக்காங்கல்பட்டியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகள் சுவேதாவிற்கும், அதே பகுதியை சேர்ந்த சினோ என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சுவேதாவும் அவரது கணவரும் தினமும் வேலைக்கு சென்று வருவதால் சுவேதா தனது 16½ பவுன் நகைகளை தந்தை சரவணனிடம் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருக்கும்படி கூறியுள்ளார். […]
