வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளியை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முளங்கூட்டுவிளை பகுதியில் கூலி தொழிலாளியான டேவிட்சன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் டேவிட்சன் அருவிக்கரை தடுப்பணை பகுதியில் பரளியாற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக டேவிட்சன் வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டுள்ளார். இதனை பார்த்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு […]
