கதண்டுகள் கடித்ததால் வயலில் வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள உத்திரகுடி கிராமத்தில் இருக்கும் வயலில் தொழிலாளர்கள் கடலை செடி பறிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில் வேலியில் இருந்த கதண்டு கூட்டில் எதிர்பாராதவிதமாக மண் விழுந்துவிட்டது. இதனால் கதண்டுகள் கூட்டில் இருந்து வெளியேறி வேலை பார்த்துக்கொண்டிருந்த தொழிலாளர்களை கடித்துள்ளது. இதனால் சேகர், மல்லிகா, ராஜா உள்ளிட்ட 6 பேரை கதண்டுகள் துரத்தி துரத்தி கடித்து காயப்படுத்தியுள்ளது. […]
