தொழிலதிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காப்புகாடு அருகே மறுகண்டான்விளை பகுதியில் பார்த்தசாரதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தெங்கம்புதூர் பகுதியில் கயிறு தொழிற்சாலை வைத்து நடத்தி வந்துள்ளார். இவர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் உரிய நேரத்தில் அவரால் கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால் பார்த்தசாரதி மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் பார்த்தசாரதி வீட்டிற்கு செல்வதாக கூறி தொழிற்சாலையிலிருந்து கிளம்பியுள்ளார். ஆனால் […]
