ஸ்கூட்டர் தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் தொழிலதிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள பவளபுரியில் எஸ்டேட் தொழிலதிபரான இளங்கோவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஸ்கூட்டரில் புறப்பட்டுள்ளார். இந்நிலையில் இளங்கோவன் கரூர்- திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் காக்காதோப்பு பிரிவில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டர் தடுப்பு சுவர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இளங்கோவனை […]
