தமிழக அரசு சமீபத்தில் மின் கட்டணம் உயர்வை அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. இந்த அறிவிப்பு குறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் தொழிற்துறை உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்பு முதல் கூட்டம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சார்பில் கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி அரங்கில் நேற்று நடைபெற்றது. இதற்கு ஆணைய தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். உறுப் பினர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். […]
