தூங்கிக்கொண்டிருந்த குழந்தையின் மீது தொலைக்காட்சிப் பெட்டி விழுந்து மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சென்னை ஓட்டேரி அடுத்த சூளைமேடு தெருவை சேர்ந்தவர்கள் காதர் மொய்தீன் ரேஷ்மா தம்பதியினர். இவர்களுக்கு நாசியா பாத்திமா என்ற 2 வயது பெண் குழந்தை இருந்தது. நேற்று நாசியா வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அச்சமயம் அவர் அருகே நாற்காலியில் வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி பேட்டி சரிந்து நாசியா மீது விழுந்துள்ளது. இதனால் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை அலறிய அலறல் சத்தம் கேட்டு ரேஷ்மா ஓடி […]
