டெல்லியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற சி.ஐ.ஐ மாநாட்டில் மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை செயலர் அபூர்வ சந்திரா பங்கேற்றுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, நாட்டில் தற்போது 20 கோடிக்கும் அதிகமான வீடுகளில் தொலைக்காட்சி உள்ளது. மேலும் 60 கோடிக்கும் அதிகமான அறிதிறன் பேசி பயனாளர்களும், 80 கோடி அகன்ற அலைவரிசை பயனாளர்களும் இருக்கின்றனர். அந்த வகையில் கைபேசி நேரடி ஒளிபரப்பு நடைமுறை அறிமுகம் செய்வது தொலைக்காட்சி ஊடக பார்வையாளர்களின் எண்ணிக்கையை மிகப்பெரிய அளவில் அதிகரிப்பதற்கான வாய்ப்பாக […]
