ஊரடங்கு தளர்வுகளை குறைக்க மருத்துவ நிபுணர் குழுவின் பரிந்துரையை பரிசீலித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிபுணர்கள், கொரோனா பாதிப்பு பகுதிகளில் அளிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகளை குறைக்க மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும் கொரோனவை கட்டுப்படுத்த பகுதிவாரியாக பரிந்துரைகளை தமிழக அரசுக்கு கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், கொரோனாவின் சிறிய அறிகுறிகள் இருந்தாலும் கூட மக்கள் அலட்சியம் செய்யக்கூடாது என தெரிவித்துள்ளனர். காய்ச்சல், […]
