அதிமுக கட்சியில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கத்தில் 4 வருடங்களாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அமைதி காத்து வந்தனர். அதன்பின் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில் வெளிப்படையாகவே ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் மோதிக்கொள்ள பொதுக்குழு கூட்டத்தில் பிரச்சனை பூகம்பமாக வெடித்தது. எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார். […]
