தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து தவித்த மலைப்பாம்பை வனத்துறை அதிகாரிகள் மீட்டனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபியில் கண்ணப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பங்களாப்புதூர் அருகிலுள்ள எருமை குட்டை பகுதியில் தனது நிலத்தில் தேக்கு மரங்களை நட்டு வளர்த்து வருகிறார். இந்த மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக 20 அடி ஆழமுள்ள ஒரு தொட்டியை கண்ணப்பன் அங்கு கட்டியுள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் கண்ணப்பன் தேக்கு மரங்களை பார்வையிட சென்றார். அப்போது தண்ணீர் தொட்டிக்குள் மலைப்பாம்பு ஒன்று தத்தளிப்பது கண்ணப்பனுக்கு தெரியவந்தது. […]
