தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வந்த ரவுடியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் வடக்கு வீதியில் வசித்து வருபவர் வேல்ராஜ். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றார். இவருடைய மனைவி நாகலட்சுமி. கடந்த மார்ச் மாதம் 18 ஆம் தேதி அன்று வேல்ராஜ் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு 39 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கீழ்வேளூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து நாகப்பட்டினம் செக்கடி தெருவில் வசித்த சேகர் […]
