பெல்கோரோட் நகரில் தொடர் குண்டு வெடிப்பால் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என பிராந்திய கவர்னர் தெரிவித்தார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 4 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டில் பல நகரங்கள் முற்றிலுமாக சின்னாபின்னமாகி உள்ளன. ஆனாலும் உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து ரஷ்ய ராணுவ படைகளை எதிர்த்து உறுதியுடன் சண்டையிட்டு வருகின்றனர். இதற்கிடையில் உக்ரைன் ராணுவ வீரர்கள் ரஷ்ய நகரங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக ரஷ்யா அவ்வப்போது குற்றம் சாட்டி வருகின்றது. […]
