தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் நீலகிரியிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கன மழை பெய்து வருகின்றது. இதனால் நிலத்தில் அதிக ஈரப்பதம் ஏற்பட்டு அங்கங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வருகின்றது. அத்துடன் சில இடங்களில் வீடுகளும் இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளது. மேலும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கோத்தகிரியில் பெய்த மழையில் குஞ்சப்பனை பழங்குடியின கிராமத்தில் […]
