தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. அதிலும் நீலகிரி, கோயம்புத்தூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் முதலில் நாகை மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கும் தொடர் கனமழையால் அடுத்தடுத்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. […]
