சீனா தொடர்ந்து மூன்றாவது நாளாக 100-க்கும் மேலான புதிய தொற்றுநோய்களை பதிவு செய்திருக்கிறது. உலகம் முழுவதிலும் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 6.75 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும் பல்வேறு நாடுகளில் உள்ள 6,75,757 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். அதே சமயத்தில் உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,74,53,103 ஆக உள்ளது. இதில் 10,921,667 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 66,467 பேர் கொரோனா பாதிப்பால் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கின்றனர். […]
