நாமக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களை திருடி வந்த மர்ம நபரை போலீசாரை கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகனம் திருட்டு நடைபெறுவதாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இரு சக்கர வாகனத்தை திருடும் மர்ம நபர்களை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாணிக்கம், தங்கம் மற்றும் காவல்துறையினர் சேர்ந்தமங்கலம் பிரிவு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். […]
