கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே, ஆயர்மடத்தில் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவியின் உடலைக் கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சமீபத்தில் கள்ளக்குறிச்சி, நேற்று திருவள்ளூர், இன்று விருத்தாசலம் என பள்ளி மாணவிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்துவரும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
